
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தில் வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது.
மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களுடைய பார்ல் ராயல்ஸ் அணியும் 2025ஆம் ஆண்டிற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அந்த அணியானது வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை பார்ல் ராயல்ஸ் அணி தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
Born in Barbados. Made a name for himself for the England U-19s. And now riding for the Royals from Paarl!
— Paarl Royals (@paarlroyals) August 9, 2024
Welcome home, Jacob Bethell pic.twitter.com/hJde1xtXKV