PAK vs WI: புதிய சரித்திரம் படைத்த முகமது ரிஸ்வான்!
ஒரே ஆண்டில் 2 ஆயிரம் சர்வதேச டி20 ரன்களை குவித்த முதல் வீரர் எனும் சாதனையை பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் படைத்துள்ளார்.

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது.
இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்களைக் குவிக்க, அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியது.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அச்சாதனையானது ஒரே ஆண்டில் 2ஆயிரம் டி20 ரன்களை குவித்த முதல் வீரர் என்பது தான். நேற்றைய போட்டியில் ரிஸ்வான் அரைசதம் அடித்ததன் மூலம் ஒரே ஆண்டில் 2,036 ரன்களை குவித்தார். இதில் 18 அரைசதம், ஒரு சதமும் அடங்கும்.
Win Big, Make Your Cricket Tales Now