Advertisement

PAK vs AUS, 1st Test (Day 2): பாகிஸ்தான் அணி 476 ரன்களில் டிக்ளர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 476 ரன்களில் டிக்ளர் செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 05, 2022 • 19:19 PM
Pak vs Aus, 1st Test: Azhar's ton powers hosts to 476 (Stumps, Day 2)
Pak vs Aus, 1st Test: Azhar's ton powers hosts to 476 (Stumps, Day 2) (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று ராவல்பிண்டியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 245 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் இமாம் உல் ஹக் 132 ரன்களுடனும், அசார் அலி 64 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

Trending


இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக் - அசார் அலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. 

இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இரட்டைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட இமாம் உல் ஹக் 157 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய அசார் அலி சதம் விளாசினார்.

பின்னர் 185 ரன்கள் எடுத்திருந்த் அசர் அலியும் ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார். இதனால் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 476 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் லையன், லபுசாக்னே, கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டை இழந்தனர்.

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரில் 5 ரன்களைச் சேர்த்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே  முடிக்கப்பட்டது.

இதனால் 471 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement