Advertisement

PAK vs NZ, 2nd Test: கான்வே, லேதம் அரைசதம்; நியூசிலாந்துக்கு வலிமையான தொடக்கம்!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 119 ரன்களைச் சேர்த்துள்ளது.

Advertisement
PAK vs NZ, 2nd Test: A strong start for New Zealand in the first session of the second Test!
PAK vs NZ, 2nd Test: A strong start for New Zealand in the first session of the second Test! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 02, 2023 • 12:54 PM

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 02, 2023 • 12:54 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கராச்சியில் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கிவுள்ளது. இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ஹசன் அலி இடம்பிடித்துள்ளார்.

Trending

நியூசிலாந்து: டாம் லாதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் பிளெண்டல், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி, டிம் சௌதீ(கே), மேட் ஹென்றி, அஜாஸ் படேல்.

பாகிஸ்தான்: அப்துல்லா ஷஃபீக், இமாம்-உல்-ஹக், ஷான் மசூத், பாபர் அசாம்(கே), சௌத் ஷகீல், சர்ஃப்ராஸ் அகமது, ஆகா சல்மான், ஹசன் அலி, நசீம் ஷா, மிர் ஹம்சா, அப்ரார் அகமது

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கும் டெவான் கான்வே - டாம் லேதம் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது. 

இவரும் இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வர அணியின் ஸ்கோரும் உயர்ந்து வருகிறது. இதேபோல் அபாரமாக விளையாடிவரும் இருவரும் தற்போது சதத்தை நோக்கி முன்னேறி வருகின்றன. அதேசமயம் இந்த இணையை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் அணியின் மிர் ஹம்சா, நசீம் ஷா, ஹசன் அலி, அப்ரார் அஹ்மத், ஆகா சல்மான் ஆகியோர் தடுமாறி வருகின்றனர்.

இதன் காரணமாக முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 119 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டெவான் கான்வே 51 ரன்களையும், டாம் லேதம் 67 ரன்களையும் சேர்த்துள்ளனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement