
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று கராச்சியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் 7 ரன்களுக்கும், இமாம் உல் ஹக் 24 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன்பின் 3ஆம் வரிசையில் இறங்கிய ஷான் மசூத் 3 ரன்களுக்கும், சௌஷ் ஷகீல் 22 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 110 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.
இதையடுத்து கேப்டன் பாபர் ஆசாம் - சர்ஃப்ராஸ் அஹமது இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ஆட வாய்ப்பு பெற்ற சர்ஃபராஸ் அகமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி. அரைசதம் அடித்தார். பாபர் அசாம் - சர்ஃபராஸ் அகமது ஆகிய இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்கு 194 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் குவித்தனர்.