Advertisement
Advertisement
Advertisement

PAK vs NZ, 3rd ODI: கிளென் பிலீப்ஸ் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 14, 2023 • 10:56 AM
PAK vs NZ, 3rd ODI: A brilliant half-century from Glenn Phillips gives New Zealand a series victory
PAK vs NZ, 3rd ODI: A brilliant half-century from Glenn Phillips gives New Zealand a series victory (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் டிரா ஆனது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2ஆவது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. இந்நிலையில், தொடரி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபகர் ஸமான், ஷான் மசூத் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஷான் மசூத் 0 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் பாபர் ஆசாம் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.

Trending


இதையடுத்து முகமது ரிஸ்வான் ஃபகர் ஸமானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பொறுமையாக விளையாடிய ஃபகர் ஸமான் சதம் அடித்து அசத்தினார். அதன்பின் 101 ரன்கள் எடுத்திருந்த ஃபகர் ஸமான் ஆட்டமிழந்தார். 

அவருடன் நிதான ஆட்டத்தை கடைப்பிடித்த ரிஸ்வான் 77 ரன்னிலும், அடுத்து வந்த ஹாரிஸ் சோஹைல் 22 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்த வந்த ஆஹா சல்மான்45 ரன்னிலும், முகமது நவாஸ் 8 ரன்னிலும், உசாமா மிர் 6 ரன்னிலும், முகமது வாசிம் ஜூனியர் 7 ர ந்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் சவுதி 3 விக்கெட்டும், பெர்குசன் 2 விக்கெட்டும், பிரேஸ்வெல், ஷோதி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் 25 ரன்களில் ஃபின் ஆலன் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த டெவான் கான்வே அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருடன் இணைந்த கேன் வில்லியம்சனும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.

அதன்பின் 52 ரன்களில் டெவான் கான்வே ஆட்டமிழக்க, 53 ரன்கள் எடுத்திருந்த கேன் வில்லியம்சனும் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செ 31, டாம் லேதம் 16, மைக்கேல் பிரேஸ்வெல் 7 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின்னர் களமிறங்கிய கிளென் பிலீப்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் 48.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 42 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 63 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

பாகிஸ்தான் மண்ணில் நியூசிலாந்து அணி ஒரு நாள் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும். மேலும் இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கிளென் பிலீப்ஸ் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுதும் அதிரடியாக விளையாடிய டெவான் கான்வே தொடர் நாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement