
PAK vs NZ: Pakistan Bowlers Make A Comeback As New Zealand Score 309/6 At Stumps On Day 1 (Image Source: Google)
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கராச்சியில் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கிவுள்ளது. இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ஹசன் அலி இடம்பிடித்துள்ளார்.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கும் டெவான் கான்வே - டாம் லேதம் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது.