
PAK vs WI, 1st T20I: Rizwan, Haider Ali's fiftys helps Pakistan post a total on 200 (Image Source: Google)
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கராச்சியில் இன்று நடைபெற்று வரும் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாம் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதைத்தொடர்ந்து களமிறக்கிய ஃபகர் ஸமானும் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - ஹைதர் அலி இணை அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.