
Pakistan Add Three Players To Test Squad For New Zealand Series (Image Source: Google)
பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் பறிகொடுத்தது. இந்த தோல்வியை அடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் மீது பல்வேறு விமர்சனங்கள் விழுந்தது.
மோலும் தொடர் தோல்விகளின் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் ரமீஸ் ராஜா இருந்து நீக்கப்பட்டார். அதேபோல் தேர்வு குழு தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதுவும் பாகிஸ்தான் மண்ணில் தான் நடைபெறுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததை சரிசெய்யும் வகையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கட்டாயம் கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது.