ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற இருந்த பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி செப்டம்பர் 3ஆம் தேதி இலங்கையில் தொடங்கும் இத்தொடர், திட்டமிட்டபடி நடைபெறுமென அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக இத்தொடரை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இன்று அறிவித்துள்ளன.
Trending
ஏனெனில் ஆஃப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் பயணம் செய்வது மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக இத்தொடரில் பங்கேற்கமுடியா சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகையில்,“வீரர்களின் மனநலப் பிரச்சினைகள், காபூலில் விமான செயல்பாடுகளில் இடையூறு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக அடுத்த மாதம் நடைபெற இருந்த ஒருநாள் தொடரை ஒத்திவைக்க ஆப்கானிஸ்தான் வாரியத்தின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்கிறது” என தெரிவித்துள்ளது.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
முன்னதாக இத்தொடருக்கான 17 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தொடர் தற்போது அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now