
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டவது டி20 போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று அசத்தியதன் காரணமாக, இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சி செய்யும்.
அதேசமயம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜிம்பாப்வே அணி இப்போட்டில் விளையாடும். இதனால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. முந்தைய போட்டியில் விளையாடிய அதே அணி இப்போட்டியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.