
பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற இருந்த முதல் டி20 போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கார்டிஃபில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும் சூழலிலும், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்ற தொடரை இழப்பதிலிருந்து மீளும் சூழலிலும் களமிறங்கவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளுக்கும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியால் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நீங்கள் ஒரு போட்டியில் தோற்றால் அது வலியை கொடுத்தாலும், ஒரு அணியாக, நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்களால் எந்த நாளிலும் எந்த அணியையும் வெல்ல முடியும் என்று நம்புகிறோம். கடந்த காலத்திலும் நாங்கள் இதனைச் செய்துள்ளோம்.