
டி 20 உலக கோப்பை இந்த ஆண்டு நடைபெற்றதால் பல்வேறு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட்டை கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக இந்திய அணி மிகவும் குறைவான அளவில் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடியது. இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான்கில், இசான் கிஷன் போன்ற வீரர்கள் எல்லாம் சாதனை படைத்தார்கள். ஆனால் அதில் ஒருவரை கூட ஐசிசி பரிந்துரை பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் ஆசாம். ஒன்பது போட்டிகளில் விளையாடி 679 ரன்களை அவர் அடித்திருக்கிறார். 2021 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை பாபர் அசாம் தான் வென்றார். இதனால் அதே சாதனையை மீண்டும் அவர் செய்வாரா என்று எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.ஜூலை 2021 ஆம் ஆண்டு முதல் பாபர் அசாம் தான் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
நடப்பாண்டில் மட்டும் பாபர் அசாம் எட்டு அரைசதமும், மூன்று சதமும் அடித்திருக்கிறார். நடப்பாண்டில் பாபர் அஸாம் ஒன்பது ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை தலைமை தாங்கி எட்டு ஆட்டங்களில் வென்றிருக்கிறார். குறிப்பாக நடப்பாண்டில் 73 பந்துகளில் பாபர் அசாம் சதம் விளாசினார்.