
Pakistan Coach Misbah Positive For Covid-19, Isolates In Jamaica (Image Source: Google)
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 4 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய பாகிஸ்தான், டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது.
இந்நிலையில் இச்சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான மிஸ்பா உல் ஹக்கிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, அவர் ஜமைக்காவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இத்தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது.
இதுகுறித்து பிசிபி வெளியிட்ட அறிக்கையில்,“மிஸ்பா உல் ஹக்கிற்கு கரோனா உறுதியான நிலையில், அவரால் சக வீரர்களுடன் இணைந்து லாகூர் வர இயலாது. மேலும் அவர் மருத்துவர்கள் கண்காணிப்புடன் 10 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்றும்” தெரிவித்துள்ளது.