
Pakistan complete the whitewash on Bangladesh in T20 series (Image Source: Google)
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச வீரர்கள் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இப்போட்டியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது நைம் 47 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் உஸ்மான் காதிர், முகமது வாசிம் ஜூனியர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.