
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் இந்தத் தொடர் அங்கு நடந்தால் நாங்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என இந்தியா அறிவித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுங்கள் என இந்தியா போர் கொடி தூக்கியது.
இதற்கு பதிலடி தந்த பாகிஸ்தான் இந்தியா ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், நாங்கள் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு வரமாட்டோம் என மிரட்டியது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி தீர்வு காண கடந்த பிப்ரவரி நான்காம் தேதி பஹைரனில் அனைத்து நாடுகளும் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. எனினும் இதில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்ததால் இந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதனை அடுத்து அடுத்த மாதம் மீண்டும் ஒரு கூட்டத்தை நடத்த உறுப்பினர் நாடுகள் முடிவெடுத்தனர். இதற்கிடையில் இந்தியா பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கும் எவ்வித பிரச்சனையும் இன்றி தொடரை நடத்த தற்போது ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.