
நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனையடுத்து அந்த அணியின் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் தற்சமயம் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தொடர்களுக்காக தயாராகி வருகின்றது.
அந்தவகையில் அந்த அணி அடுத்ததாக வரும் ஆகஸ்ட் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையடாவுள்ளது. அதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக அக்டோபர் மாதம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
அதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. முன்னதாக அந்த அணி கடந்த 2020-21இல் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி அதன்பின் தற்போது தான் மீண்டும் அங்கு பயணிக்கவுள்ளது.