Advertisement

4 நாட்களாக ஷாஹீன் அப்ரிடி வைரஸ் காய்ச்சால் துவண்டு போய்விட்டார் - மோர்னே மோர்கல்!

தொடக்கத்திலேயே ஷாஹீன் அஃப்ரிடி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரின் உழைப்புக்கு விக்கெட்டுகளை கைப்பற்றப்பட்டது என பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement
4 நாட்களாக ஷாஹீன் அப்ரிடி வைரஸ் காய்ச்சால் துவண்டு போய்விட்டார் - மோர்னே மோர்கல்!
4 நாட்களாக ஷாஹீன் அப்ரிடி வைரஸ் காய்ச்சால் துவண்டு போய்விட்டார் - மோர்னே மோர்கல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 21, 2023 • 07:00 PM

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 367 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 121 ரன்களும் விளாசினர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 21, 2023 • 07:00 PM

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் 305 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு ஒரேயொரு கேட்சை கோட்டைவிட்டதே காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் 5வது ஓவரின் போது டேவிட் வார்னர் கொடுத்த எளிய கேட்சை இளம் வீரர் உஸாமா மிர் நழுவவிட்டார். இந்த போட்டிக்கு பின் பாகிஸ்தான் அணி மீதான செயல்பாடுகள் அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளாகியது. 

Trending

இதனைத் தொடர்ந்து கேட்சை கோட்டைவிட்ட உஸாமா மிர் தனது ட்விட்டர் பக்கத்தில், “டேவிட் வார்னர் கொடுத்த கேட்சை கோட்டைவிட்டதற்காக வெட்கப்படுகிறேன். கேட்சை விட்டது என்னுடைய தவறுதான். கேப்டன் பாபர் அசாம் என் மீதும், திறமை மீதும் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப என்னால் விளையாட முடியவில்லை. நான் நழுவவிட்ட கேட்ச் தோல்விக்கு வழிவகுத்தது சோகத்தை அளிப்பதாக” தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பேசுகையில், “பாகிஸ்தான் அணியின் உஸாமா மிர்-க்கு ஆதரவாக இருக்கின்றனர். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கேட்சை நழுவ முடியாமல் போகலாம். அதனை போட்டியின் ஒரு அங்கமாக பார்த்து கடக்க வேண்டும். நிச்சயம் இதில் இருந்து மிர் மீண்டும் வருவார் என்று நம்புகிறேன். உலகக்கோப்பை தொடரில் தவறுகளின் சதவிகிதம் குறைவாக இருக்க வேண்டும். ஷாஹீன் அஃப்ரிடி மிகச்சிறப்பாக பந்துவீசினார்.

தொடக்கத்திலேயே ஷாஹீன் அஃப்ரிடி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரின் உழைப்புக்கு விக்கெட்டுகளை கைப்பற்றப்பட்டது. கடந்த 4 நாட்களாக ஷாஹீன் அப்ரிடி வைரஸ் காய்ச்சால் துவண்டு போய்விட்டார். அந்த நேரத்தில் பயிற்சியை கூட செய்ய முடியவில்லை. ஒரேயொரு பயிற்சி செஷனுக்கு பின் இப்படி பந்துவீசியது ஆச்சரியமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement