
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணியில் தொடக்க வீரர் குல் ஃபெரோசா 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த முனீபா அலி மற்றும் சித்ரா அமீன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் முனிபா அலி 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் அமீனுடன் இணைந்த அலியா ரியாஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் தங்களுடைய அரைசதத்தை பூர்த்தி செய்த நிலையில் சித்ரா அமீன் 51 ரன்களிலும், அலியா ரியாஸ் 52 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து தரப்பில் ஜேன் மாகுயர் 3 விக்கெட்டுகளையும், அர்லீன் கெல்லி, காரா முர்ரே தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.