
நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர்கள் வரும் 14ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர்களுக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வில் இருந்த பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், பகர் ஸமான் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்புகின்றனர். அதேபோல் நீண்ட நாளுக்கு பிறகு நட்சத்திர வீரர் ஷாஹின் அஃப்ரிடியும் அணியில் இடம்பிடிதுள்ளார்.
டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு பாபர் ஆசாம் கேப்டனாகவும், ஷதாப் கான் துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரிசர்வ் வீரர்களாக அபாஸ் அஃப்ரிடி, அப்ரார் அகமது, தயூப் தாஹிர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.