
AUS vs PAK: பாகிஸ்தான் அணியில் முகமது நவாஸ் சேர்ப்பு! (Image Source: Google)
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியை ருசித்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 26) மெல்போர்னில் தொடங்குகிறது. மேலும் இது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியிலிருந்து அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் நௌன் அலி விலகியுள்ளார். ஏற்கெனவே பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் குர்ரம் ஷாசத் காயம் காரணமாக விலகிய நிலையில், அந்தப் பட்டியலில் தற்போது நௌமன் அலியும் இணைந்துள்ளார்.