
Pakistan leg-spinner Yasir Shah accused of aiding in rape, harrasing a 14-year old girl (Image Source: Google)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 35 வயது சுழறபந்துவீச்சாளார் யாஷிர் ஷா. இந்நிலையில் இவர் மீது சிறுமி ஒருவர் அளித்த புகாரின் பேரில் இஸ்லாமாபாத் காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி 14 வயது சிறுமி ஒருவர், யாஷிர் ஷாவின் நண்பர் ஃபர்ஹான் என்பவர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதற்கு உடந்தையாக இருந்த யாஷிர் ஷா, இதுதொடர்பாக புகார் அளித்தால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தன்னை மிரட்டியதாகவும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், இஸ்லாமாபாத்தின் ஷாலிமர் காவல்நிலையத்தில் யாஷிர் ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.