
Pakistan name 12-player squad for first Test against Bangladesh (Image Source: Google)
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்தும் அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதையடுத்து இப்போட்டிக்கான 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.