
இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னர் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியான அணியாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதி பெறாமல் வெளியேறியது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தற்போது மிகவும் மென்மையான வீரர்களாக மாறிவிட்டார்கள். முன்பெல்லாம் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு களத்தில் அனல் பறக்கும் செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள்.