
டி20 கிரிக்கெட் வருகைக்கு பிறகு, கிரிக்கெட் மிகப்பெரிய வணிக ரீதியான விளையாட்டாக மாறி இருக்கிறது. வீரர்கள் ஆரம்பகாலத்தை விட தற்பொழுது மிக அதிகமான பொருளாதாரத்தை ஈட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு முன்பான காலகட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டும் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட கிரிக்கெட் வாரியங்களாக, உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்தக்கூடிய அமைப்புகளாக இருந்தன.
ஆனால் டி20 கிரிக்கெட் வருகையும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடர் நடத்த ஆரம்பித்த பிறகும், ஒட்டுமொத்தமாக நிலைமைகள் தலைகீழாக மாறி, பொருளாதாரம் மற்றும் ஆதிக்கம் இரண்டிலும் உலக கிரிக்கெட்டில் இந்தியா எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஏ ப்ளஸ், ஏ, பி, சி, என 4 பிரிவுகளில் வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பிரிவுக்கும் முறையே 7 கோடி, 5 கோடி, 3 கோடி, 1 கோடி என சம்பளம் வழங்கப்படுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ட்ப்ரீத் பும்ரா நால்வரும் ஏ ப்ளஸ் பிரிவில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்த முடிவு செய்து அறிவித்திருக்கிறது. காரணம் அங்கு சமீபத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு அவர்களுடைய பணத்தின் மதிப்பு வெகுவாக சரிந்தது.