Advertisement

உலகக்கோப்பை 2023: இறுதிக்கட்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு; முக்கிய வீரருக்கு இடமில்லை!

எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக இடம் பிடிக்கவில்லை. 

Advertisement
உலகக்கோப்பை 2023: இறுதிக்கட்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு; முக்கிய வீரருக்கு இடமில்லை!
உலகக்கோப்பை 2023: இறுதிக்கட்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு; முக்கிய வீரருக்கு இடமில்லை! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 22, 2023 • 01:49 PM

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்த உலகக்கோப்பை தொடரில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற கருத்டு கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.  

Bharathi Kannan
By Bharathi Kannan
September 22, 2023 • 01:49 PM

அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய முன்னாள் வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் அணியை சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் முடிந்த ஆசிய கோப்பை தொடரில் மோசமான தோல்விக்குப் பிறகு அந்த அணி உலக கோப்பை தொடரில் மீண்டு வந்து எழுச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

முன்னதாக ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு இறுதியாக அணியை அறிவிக்கும் நாளாக 28ஆம் தேதி இருக்கிறது. செப்டம்பர் 5ஆம் தேதி முதல் அணியை தர வேண்டும், பிறகு செப்டம்பர் 28ஆம் தேதி வரையில் அதில் தேவைப்படும் மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்று ஐசிசி விதிமுறை வகுத்திருந்தது.

இந்த நிலையில் இந்தியாவை எடுத்துக் கொண்டால் 27ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு, கடைசி நாளான 28ஆம் தேதி உலகக் கோப்பை இந்திய அணியை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி இன்று தனது 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியை வெளியிட்டு இருக்கிறது. இந்த அணியில் சில ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் வந்திருக்கின்றன.

நடைபெற்று முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு வர முடியாததை விட, அந்த அணி பெற்ற தோல்விகள் எப்படி இருந்தன? என்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பலத்த சலசலப்புகளை உண்டாக்கி இருந்தது. பாகிஸ்தான் இந்தியாவுடன் 228 ரன்கள் என்கின்ற வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 

அதே சமயத்தில் வலிமைக்குன்றி இருந்த இலங்கை அணியை வீழ்த்த முடியாமல் வெளியேறியது. இதெல்லாம் பாகிஸ்தான் அணி நிர்வாகம் மீதும் கேப்டன் பாபர் அசாம் மீதும் பெரிய விமர்சனங்களை உருவாக்கியது. இந்த நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் உலகக் கோப்பை பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக பாபர் அசாம் தொடர்கிறார். காயம் அடைந்த நட்சத்திர இளம் வேகபந்துவீச்சாளர் நசிம் ஷா உலகக் கோப்பை தொடரை தவறவிடுகிறார்.

 

அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹசன் அலி சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் ஒரு கூடுதல் சுழற் பந்துவீச்சாளராக உசாமா மிர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். மேலும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஃபஹீம் அஷ்ரஃப் நீக்கப்பட்டு இருக்கிறார். இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சவுத் ஷகீல் அணியில் தொடர்கிறார்.

பாகிஸ்தான் அணி: பாபர் அஸம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷாஹின் ஷா அஃப்ரிடி, முகமது வாசிம்.

ரிசர்வ் வீரர்கள் - முகமது ஹாரிஸ், ஸமான் கான், அப்ரார் அஹ்மத்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement