
வெஸ்ட் இண்டீஸ் அணியானது அடுத்ததாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்மூலம் 18 ஆண்டுகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் டெஸ் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இந்த தொடர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இட்தொடருக்கான முழு அட்டவணையையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜவரி 6ஆம் தேதி பாகிஸ்தான் சென்றடையும் வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணிக்கு எதிரான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேறவுள்ளது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியானது ஜனவரி10 தேதி ராவல்பிண்டியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ஜனவரி 16அம் தேதி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்திலும், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜனவரி 24ஆம் தேதி முல்தான் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.