Advertisement
Advertisement
Advertisement

பாகிஸ்தான் vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை கராச்சியில் நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 25, 2022 • 21:57 PM
Pakistan vs New Zealand – PAK vs NZ 1st Test, Cricket Match Prediction, Where To Watch, Probable XI
Pakistan vs New Zealand – PAK vs NZ 1st Test, Cricket Match Prediction, Where To Watch, Probable XI (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரில் இங்கிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆகி வரலாற்று படுதோல்வியை சந்தித்தது. 

இந்நிலையில் அந்த அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை கராச்சியில் நடைபெறுகிறது.

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs நியூசிலாந்து
  • இடம் - தேசிய மைதானம், கராச்சி
  • நேரம் - காலை 10.30 மணி

போட்டி முன்னோட்டம்

பாகிஸ்தான் அணி சமீபத்தில் தான் இங்கிலந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்து படுதோல்வியைச் சந்தித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை மேம்படுத்தும் நோக்கில் ஷாஹித் அஃப்ரிடி இடைக்கால தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

நேற்றுதான் பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவராக அஃப்ரிடி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 3 வீரர்கள் சேர்க்கப்பட்டனர். அறிமுக வேகப்பந்து வீச்சளர் ஷாநவாஸ் தஹானி, மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மிர் ஹம்ஸா மற்றும் ஆஃப் ஸ்பின்னர் சஜித் கான் ஆகிய மூவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் அணியின் பேட்டிங்கில் அப்துல்லா ஷஃபிக், ஷான் மசூத், பாபர் ஆசாம், சௌத் ஷகீல் ஆகியோரும், பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத், நௌமன் அலி ஆகியோருடன் ஹசன் அலியும் அணியில் இணைந்திருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் நியூசிலாந்து அணி டிம் சௌதி தலைமையில் இத்தொடரை எதிர்கொள்கிறது. ஏனெனில் சமீபத்தில் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் தனது பதவியிலிருந்து விலகிய நிலையில் டிம் சௌதீ நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அதேசமயம் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியிலும் கேன் வில்லியம்சன் இடம்பிடித்துள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் டெவான் கான்வே, ஹென்றி நிக்கோலஸ், டாம் லேதம் ஆகியோர் பேட்டிங்கிலும், நீல் வாக்னர், மிட்செல் பிரேஸ்வெல், அஜாஸ் படேல் ஆகியோரும் இருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 60
  • பாகிஸ்தான் - 25
  • நியூசிலாந்து - 14
  • முடிவில்லை - 21

உத்தேச லெவன்

பாகிஸ்தான் - அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம் (கே), முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், சௌத் ஷகீல், முகமது நவாஸ், நசீம் ஷா, ஹசன் அலி, நௌமன் அலி, அப்ரார் அகமது.

நியூசிலாந்து - டாம் லாதம், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் பிளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதீ (கே), அஜாஸ் படேல், நீல் வாக்னர்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - டாம் பிளன்டெல்
  • பேட்டர்ஸ் - கேன் வில்லியம்சன், பாபர் அசாம், டெவோன் கான்வே, இமாம்-உல்-ஹக்
  • ஆல்-ரவுண்டர்கள் - டேரில் மிட்செல், முகமது நவாஸ்
  • பந்துவீச்சாளர்கள் - டிம் சவுத்தி, அஜாஸ் படேல், அப்ரார் அகமது, நௌமன் அலி


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement