பாகிஸ்தான் vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கராச்சியில் நடைபெறுகிறது.
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இந்த டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்றாலும், பாகிஸ்தான் - நியூசிலாந்து ஆகிய 2 அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பொறுத்தமட்டில் இது முக்கியமான தொடர் அல்ல. ஆனால் இந்த தொடரை வெல்ல இரு அணிகளில் ஒன்று வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அண்மையில் சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் முதல் முறையாக டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான் அணி, இந்த தொடரில் வெல்லும் முனைப்பில் உள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs நியூசிலாந்து
- இடம் - தேசிய மைதானம், கராச்சி
- நேரம் - காலை 10.30 மணி
போட்டி முன்னோட்டம்
பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இங்கிலாந்திடம் படுதோல்வியை தழுவியதை அடுத்து,இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் அந்த அணி பேட்டிங், பந்துவீச்சு என இரு பிரிவிலும் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை டிரா செய்தது.
அதிலும் கேப்டன் பாபர் அசாம் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசினார. அதேபோல் நான்காண்டுகளுக்கு பின் அணியில் இடம்பிடித்த சர்ஃப்ராஸ் அஹ்மது இரு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்தும், சௌத் சகீல் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதனால் அந்த அணியின் பேட்டிங் எதிரணிக்கு சவாலளிக்கும் வகையிலே உள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரையில் அப்ரார் அஹ்மத் தொடர்ந்து எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். அவருடன் நௌமன் அலி, முகமது வாசீம் ஜூனியர், மிர் ஹம்சா ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் இப்போட்டியில் அந்த அணி நெருக்கடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதிலும் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சதத்தை பதிவு செய்ததுடன் நில்லாமல், அதை இரட்டை சதமாகவும் மாற்றி அசத்தினார்.
அவருடன் டாம் லேதம், டெவான் கான்வே, டெரில் மிட்செல், டாம் பிளெண்டல் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது அந்த அணிக்கும் நம்பிக்கையளித்துள்ளது. பந்துவீச்சில் இஷ் சோதி, அஜாஸ் படேல், நெய்ல் வாக்னர் ஆகியோர் இருப்பதால் நிச்சயம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 61
- பாகிஸ்தான் வெற்றி - 25
- நியூசிலாந்து - 14
- முடிவில்லை - 22
உத்தேச லெவன்
பாகிஸ்தான் - அப்துல்லா ஷஃபீக், இமாம்-உல்-ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கே), சவுத் ஷகீல், சர்பராஸ் அகமது, ஆகா சல்மான், நௌமன் அலி, முகமது வாசிம் ஜூனியர், அப்ரார் அகமது, மிர் ஹம்சா.
நியூசிலாந்து - டாம் லாதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சவுத்தி (கே), இஷ் சோதி, நீல் வாக்னர், அஜாஸ் படேல்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - டாம் ப்ளன்டெல், சர்பராஸ் அகமது
- பேட்டர்ஸ் - கேன் வில்லியம்சன், பாபர் அசாம், டெவான் கான்வே, இமாம்-உல்-ஹக்
- ஆல்-ரவுண்டர்கள் - டேரில் மிட்செல்
- பந்துவீச்சாளர்கள் - டிம் சவுத்தி, முகமது வாசிம் ஜூனியர், அப்ரார் அகமது, நௌமன் அலி.
Win Big, Make Your Cricket Tales Now