பாகிஸ்தான் vs நியூசிலாந்து, 3ஆவது ஒருநால் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கராச்சியில் நடைபெறுகிறது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரில் எந்த அணியும் வெற்றிபெறாமல் டிராவில் முடிவடைந்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளனர்.
Trending
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs நியூசிலாந்து
- இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், கராச்சி
- நேரம் - மாலை 3 மணி
போட்டி முன்னோட்டம்
பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் அசத்தலான வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாக அந்த அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை கேப்டன் பாபர் ஆசாமை மட்டுமே பெரிதும் நம்பிவருகிறது. அவர்களுடன், ஃபகர் ஸமான், இமாம் உல் ஹக், ஷான் மசூத், முகமது ரிஸ்வான் போன்றோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணி நிச்சயம் எதிரணி பந்துவீச்சாளர்களை புரட்டியெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஹாரிஸ் ராவுஃப், நசீம் ஷா, மொஹமது ஹொஸ்னைன், முகமது வாசீம் ஜூனியர் போன்ற சிறப்பான பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இந்தாண்டு உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு இத்தொடரை எதிர்கொள்கிறது. அதன்படி முதல் போட்டியில் அந்த அணி தோல்வியடைந்தாலும், இரண்டாவது போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் ஃபின் ஆலன், டாம் லேதம், கிலென் பிலீப்ஸ், டேரில் மிட்செல் போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் அந்த அணி போட்டியை வெல்லும் என அடித்துக்கூறலாம்.
பந்துவீச்சில் லோக்கி ஃபர்குசன், டிம் சௌதீ, மைக்கேல் பிராஸ்வெல் ஆகியோருடன் இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர் ஆகியோரும் இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 109
- பாகிஸ்தான் - 56
- நியூசிலாந்து - 49
- டிரா - 01
- முடிவில்லை - 03
உத்தேச அணி
பாகிஸ்தான் - ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம் (கே) ,முகமது ரிஸ்வான், ஹாரிஸ் சோஹைல், அகா சல்மான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ராவுஃப், நசீம் ஷா, உசாமா மிர்.
நியூசிலாந்து - டெவோன் கான்வே, ஃபின் ஆலன், கேன் வில்லியம்சன் (கே), டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல்,இஷ் சோதி, டிம் சௌதீ, லாக்கி ஃபர்குசன்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - டாம் லாதம், முகமது ரிஸ்வான்
- பேட்டர்ஸ் - கேன் வில்லியம்சன், பாபர் அசாம், ஃபகார் ஸமான், டெவோன் கான்வே
- ஆல்-ரவுண்டர்கள் - முகமது நவாஸ்
- பந்துவீச்சாளர்கள் - டிம் சவுத்தி, நசீம் ஷா, உசாமா மிர், இஷ் சோதி
Win Big, Make Your Cricket Tales Now