நியூசிலாந்து vs பாகிஸ்தான், அரையிறுதிச் சுற்று - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிச்சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் சூப்பர்12 சுற்றின் முடிவில் குரூப்1இல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், குரூப் இரண்டில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
இந்த நிலையில் சிட்னியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தானுடன் மோதுகிறது.
Trending
சூப்பர்12 சுற்றில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து அணிகளை வீழ்த்திய நியூசிலாந்து, இங்கிலாந்திடம் மட்டும் தோற்றது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதுவரை டி20 உலக கோப்பையை வெல்லாத நியூசிலாந்து அணிக்கு, அந்த கனவை அடைவதற்கான முதற்படி இன்றைய ஆட்டமாகும்.
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடந்த உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.
நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் கிளென் பிலிப்ஸ், டெவான் கான்வே, கேப்டன் வில்லியம்சன் ஆகியோரும், பந்துவீச்சில் மிட்செல் சான்ட்னெர், டிம் சௌதி, லோக்கி ஃபர்குசன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
அதே சமயம் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி இந்தியா, ஜிம்பாப்வேயிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவி, அதன் பிறகு நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணிகளை சாய்த்து சரிவில் இருந்து மீண்டது. நெதர்லாந்து அணி தனது கடைசி லீக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதன் பலன் பாகிஸ்தானுக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் அடித்தது.
அந்த அணியில் முகமது ரிஸ்வான், ஷான் மசூத், இஃப்திகார் அஹ்மது போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கில் மோசமான நிலையில் காணப்படுகிறார். பாகிஸ்தான் அணியின் பலமே பந்துவீச்சுதான். ஷதாப் கான், ஷாஹின் ஷா அஃப்ரிடி, முகமது வாசிம் ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர்.
கடந்த மாதம் நியூசிலாந்தில் நடந்த முத்தரப்பு 20 ஓவர் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. அந்த வெற்றி பாகிஸ்தானுக்கு அசாத்திய நம்பிக்கை கொடுக்கும். மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
உத்தேச லெவன்
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் ஆசம் (கே), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா.
நியூசிலாந்து: ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கே), க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, லாக்கி ஃபெர்குசன், டிரென்ட் போல்ட்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள்: டெவோன் கான்வே, முகமது ரிஸ்வான்
- பேட்டிங்: கிளென் பிலிப்ஸ், இஃப்திகார் அகமது, முகமது ஹாரிஸ்
- ஆல்ரவுண்டர்கள்: மிட்செல் சான்ட்னர், ஷதாப் கான், முகமது நவாஸ்
- பந்துவீச்சு: ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், டிம் சவுத்தி.
Win Big, Make Your Cricket Tales Now