பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Pakistan vs South Africa 1st T20 Match Prediction: தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன.
இதையடுத்து பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை முதல் தொடங்க இருக்கும் நிலையில், தொடரின் முதல் போட்டி நாளை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
PAK vs SA 1st T20: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
- நேரம் - இரவு 8.30 மணி