
ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் இருந்து பாக். முக்கிய வீரர்கள் விலகல்! (Image Source: Google)
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.