Advertisement

ரோஹித் - ராகுல் சாதனையை முறியடித்த பாபர் - ரிஸ்வான்!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக பாகிஸ்தானின் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை புதிய சாதனைப் படைத்துள்ளது.

Advertisement
Pakistan's opening pair of Babar Azam-Mohammad Rizwan pips KL Rahul-Rohit Sharma to script massive T
Pakistan's opening pair of Babar Azam-Mohammad Rizwan pips KL Rahul-Rohit Sharma to script massive T (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 17, 2021 • 02:26 PM

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி முடித்துள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றி அசத்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 17, 2021 • 02:26 PM

நேற்று கராச்சி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் அணியானது 19ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

Trending

இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பாபர் அசாம் 79 ரன்களும், ரிஸ்வான் 87 ரன்கள் குவித்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு 158 ரன்கள் இருவரும் சேர்ந்து குவித்ததால் பாகிஸ்தான் அணி இந்த போட்டியை எளிதாக வெற்றி பெற்று அசத்தியது. 

இந்நிலையில் இந்த போட்டியில் மூலம் தொடக்க வீரர்களான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் இந்திய வீரர்களான ரோஹித் ராகுல் ஆகியோரது உலக சாதனையை முறியடித்து தங்களது சாதனையை தற்போது பதித்துள்ளனர்.

அந்தவகையில் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடிகளாக இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் திகழ்ந்தனர். இதுவரை 5 முறை இவர்கள் இருவரும் சேர்ந்து டி20 போட்டிகளில் 100 ரன்கள் ஜோடியாக பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளனர்.

இந்நிலையில் அந்த சாதனையை தற்போது பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஜோடி முறியடித்துள்ளது. நேற்றைய போட்டியில் அவர்கள் அமைத்த 158 ரன்கள் பாட்னர்ஷிப் மூலம் இதுவரை டி20 கிரிக்கெட்டில் 6 முறை 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிக முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக தங்களது சாதனையை பதிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தான் அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் இவர்கள் இருவரின் ஆட்டத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அது மட்டுமின்றி இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் மட்டும் ரிஸ்வான் 2000 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement