
ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரை இந்திய அணி 2 -1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியுள்ளது. அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மோதவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தான் தீவிரமடைந்துள்ளன.
இந்திய அணியில் உள்ள பெரும் குழப்பம் தினேஷ் கார்த்திக் - ரிஷப் பந்த் தான். ஆஸ்திரேலிய தொடரில் தினேஷ் கார்த்திக் மீது முழு நம்பிக்கை வைத்த ரோகித் சர்மா, ரிஷப் பந்தை வெளியில் உட்கார வைத்தார். எனினும் தினேஷுக்கு பெரியளவில் பேட்டிங் வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்க தொடரில் என்ன செய்யப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார். அதில், “என்னைப் பொறுத்தவரை டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக தினேஷ் கார்த்திக் - பந்த் இருவருமே நிறைய போட்டிகளில் விளையாடி தயாராக வேண்டும். குறிப்பாக தினேஷ் கார்த்திக் தயாராக போட்டிகள் தேவை. ஏனென்றால் அவருக்கு ஒரு சில பந்துகளே ஆடுவதற்கு கிடைக்கிறது.