
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி பென் டக்கெட் (51), லியாம் லிவிங்ஸ்டோன் (43) ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பென் டக்கெட் 52 ரன்களைச் சேர்த்தார்.
இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 40 ரன்களைச் சேர்த்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்திய அணியின் இந்த தோல்விக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் என முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "நீங்கள் உங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ளும்போது, ஆடுகளத்தின் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை நீங்கள் சரியாக கணித்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் 20-25 பந்துகளை எடுத்துக்கொண்டு நிலைமையை சரிசெய்ய முடியாது. அது மற்ற பேட்டர்களுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.