
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 23 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கிளென் பிலீப்ஸ், மேத் ஹென்றி ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் சோபிக்க தவறியதால் முதல் இன்னிங்ஸில் 179 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கிளென் பிலீப்ஸ் 71 ரன்களையும், மேட் ஹென்றி 42 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்கள் முன்னிலையும் பெற்று அசத்தியது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 13 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 5 ரன்களுடனும், நாதன் லையன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இதையடுத்து 217 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.