பிசன் சிங் பேடியின் சாதனையை சமன்செய்த பாட் கம்மின்ஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிசன் சிங் பேடியின் சாதனையை பாட் கம்மின்ஸ் சமன்செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் 180 ரன்களில் அல் அவுட்டானது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்களை குவித்தது.
அதன்பின் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா அணியில் நிதீஷ் ரெட்டி 42 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தவிர்த்து வேறெந்த வீரரும் ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் இந்திய அணி 175 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், ஆஸ்திரேலிய அணிக்கு 19 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Trending
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிசன் சிங் பேடியின் சாதனையை பாட் கம்மின்ஸ் சமன்செய்துள்ளார். அதன்படி பிசன் சிங் பேடி 8 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில் தற்சமயம் பாட் கம்மின்ஸும் 8 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அவரது சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.
அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்டன்கள் (டெஸ்டில்)
- இம்ரான் கான் (பாகிஸ்தன்) - 12 முறை
- ரிச்சி பெனாட் (ஆஸ்திரேலியா) - 9 முறை
- பிசன் சிங் பேடி (இந்தியா) - 8 முறை
- பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) - 8 முறை
- ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) - 7 முறை
இதுதவிர்த்து இப்போட்டியில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலிலும் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக இந்த பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 8 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில், தற்சமயம் பாட் கம்மின்ஸ் 9ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்
- ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - 11 முறை
- நாதன் லையன் (ஆஸ்திரேலியா) - 10 முறை
- பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) - 09 முறை
- ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) - 08 முறை
- காகிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா) - 07 முறை
Win Big, Make Your Cricket Tales Now