இந்தியாவை எதிர்கொள்ள எங்களிடம் திட்டம் உள்ளது - பாட் கம்மின்ஸ்!
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணியிடம் திட்டம் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகள்க்கு மத்தியில் ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி வரும் அக்டோபர் 8 ஆம் தேதி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணியிடம் திட்டம் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
Trending
அண்மையில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு ஓரிரு நாள்களே உள்ளன. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கான பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி ஈடுபட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அதிக அளவிலான சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்தியாவில் அதிகம் விளையாடியுள்ளார்கள். ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் எதிர்கொள்ள எங்களிடம் திட்டமுள்ளது. நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now