Advertisement

பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது

Advertisement
பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 01, 2025 • 01:03 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 01, 2025 • 01:03 PM

இதில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் இரு அணிகளும் இடையேயான இப்போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

பஞ்சாப் கிங்ஸ்

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றில் தடுமாறி வருகிறது. அதிலும் குறிப்பாக முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் அந்த அணி பேட்டிங்கில் சொதப்பியதுடன் வெறும் 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்ஷிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டொய்ஸ்னிஸ் உள்ளிட்டோர் இருப்பது அணியின் பலங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் பந்துவீச்சில் ஆர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன், ஹர்பிரீத் பிரார், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் உள்ளிட்டோருடன் இன்றைய போட்டியில் யுஸ்வேந்திர சஹாலும் விளையாடுவார் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங்.

மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவுசெய்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியதுடன், எலிமினேட்டர் சுற்றிலும் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்ம ஃபர்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

அவருடன் அணியில் புதிதாக இணைந்துள்ள ஜானி பேர்ஸ்டோவும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்துள்ளார். மேற்கொண்டு சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, நமன் தீர் உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்படுவது அணிக்கு பெரும் பலமாக உள்ளது. மறுபக்கம் பந்துவீச்சிலும் டிரென்ட் போல்ட், தீபக் சஹார், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோரும் அபாரமான ஃபார்மில் உள்ளதால், இன்றைய ஆட்டத்திலும் மும்பை அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: ஜானி பேர்ஸ்டோவ், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சரித் அசலங்கா, நமன் தீர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 32
  • மும்பை இந்தியன்ஸ் - 17
  • பஞ்சாப் கிங்ஸ் - 15

Also Read: LIVE Cricket Score

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்சன் சிங், ஜோஸ் இங்லிஷ்
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), பிரியன்ஷ் ஆர்யா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹார்டிக் பாண்டியா, மார்கஸ் ஸ்டோய்னிஸ்
  • பந்துவீச்சாளர்கள்- ஜஸ்பிரித் பும்ரா, ஹர்பிரீத் ப்ரார்.
Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement