இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலக பாகிஸ்தான் முடிவு?
இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை புறக்கணிக்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அட்டவணைப்படி பாகிஸ்தானில் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா, ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி,பாகிஸ்தான் செல்லாது என தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும் என்று ஜெய் ஷா குறிப்பிட்டார். இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்றும், இதில் நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டோம் என்றும் ஜெய் ஷா கூறி இருந்தார்.
Trending
இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை புறக்கணிக்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், " பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இப்போது கடினமான முடிவுகளை எடுக்க தயாராக உள்ளது. ஏனெனில் இந்த பல அணிகள் பங்கேற்கும் ஐசிசி தொடர்களில், பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாடாவிட்டால், ஐசிசி வணிக இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை நாங்கள் அறிவோம்" என்றார். இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
Win Big, Make Your Cricket Tales Now