
இந்திய அணி தற்பொழுது சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நேற்று மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் டி20 போட்டி ரத்து செய்யப்பட்டது. பேட்ஸ்மேன்களுக்கு கொஞ்சம் கடினமான ஆடுகளத்தை கொண்ட மேலும் புதிய சூழ்நிலையில் இந்திய இளம் பேட்ஸ்மேன்கள் எவ்வாறு செயல்படுவார்கள்? என பார்ப்பதற்கு ரசிகர்கள் வரை மிகப்பெரிய அளவில் காத்திருந்தார்கள்.
ஆனால் நேற்றைய மழை மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இது மட்டும் இல்லாமல் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலுடன் ருத்ராஜ் இல்லை கில் இருவரில் யார் வருவார்கள்? ஸ்ரேயா ஐயரா இல்லை திலக் வர்மாவா? என்கின்ற கேள்விகள் இருந்தது. நேற்று அதற்கும் பதில் காண முடியவில்லை. குறிப்பாக ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வரும் ரிங்கு சிங் பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து அவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டிக்கு முன்பாக பேசியிருந்த அவர் தென் ஆப்பிரிக்காவில் வேகம் மற்றும் பவுன்ஸ் கொண்ட ஆடுகளங்களில் எப்படி விளையாடுவது என, தான் பயிற்சி செய்து தயாராகி இருப்பதாக கூறியிருந்தார். ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறியிருந்தார்.