
பிஎஸ்எல் 2024: பெஷாவர் ஸால்மி vs லாகூர் கலந்தர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதில் பெஷாவர் ஸால்மி அணி விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி, இரண்டு தோல்வி என 6 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் மூன்றாம் இடத்தை தக்கவைத்துள்ளது. அதேசமயம் லாகூர் கலண்டஹ்ர்ஸ் அணி விளையாடியுள்ள 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தை பிடித்திருப்பதுடன், நடப்பு பிஎஸ்எல் தொடரின் குவாலிஃபையர் சுற்றுக்கான வாய்ப்பையும் ஏறத்தாழ இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பெஷாவர் ஸால்மி vs லாகூர் கலந்தர்ஸ்
- இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
- நேரம் - மதியம் 2.30 மணி
பிட்ர் ரிப்போர்ட்