
ரசிகர்கள் பெரிதும் எதிபார்த்து காத்திருக்கும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வென்றிடாத இரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அதன்படி ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் இரு அணிகளும் கடந்த 18 சீசன்களாக ஐபிஎல் தொடரில் விளையாடிய நிலையிலும் இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் வேளையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகிவுள்ளது. ஆர்சிபி அணியின் அதிரடி தொடக்க வீரர் பில் சால்ட் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது. மேலும் அவர் நேற்று நடைபெற்ற பயிற்சி முகாமிலும் பங்கேற்கவில்லை என்று கூறுப்படுகிறது.