
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஜனவரி 26ஆம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள், டி20 அணிகளுக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்படவுள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி மும்பையில் பயிற்சி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், முதல் நாள் பயிற்சியின்போதே துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா தொடைப் பகுதி தசைப் பிடிப்பு காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கு முன்பு காயம் சரியாகவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் அணியில் இணைந்துகொண்டார். தென் ஆப்பிரிக்கா செல்வதற்கு முன்பு, கேப்டன் விராட் கோலி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.