
Pitch invader's return at Headingley leaves R Ashwin in splits (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 2 போட்டிகளிலும், தற்போது நடந்து வரும் 3வது போட்டியிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது ஒரு பக்கம் சர்ச்சையாகி வருகிறது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி, தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்றைய போட்டியின் போது ரோஹித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறிய தருணத்தில், விராட் கோலிக்கு பதிலாக ஜார்வோ என்ற ரசிகர் கையில் பேட்டுடன் களமிறங்க வந்தார். இதனை கவணித்த மைதான ஊழியர்கள் உடனடியாக அவரை குண்டுக்கட்டாக மைதானத்திலிருந்து வெளியேற்றினர். மேலும் ஜார்வோ களமிறங்க வந்த காணொளி சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.