
ஐபிஎல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச முடிவுசெய்தார்.
இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் இணை களமிறங்கினர். இதில் அகர்வால் 14 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ராகுலுடன் ஜோடி சேர்ந்த கிறிஸ் கெய்லும் தனது பங்கிற்கு ஒருசில பவுண்டரிகளைப் பறக்கவிட்டு 40 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் ராகுலுடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் கோபாலின் ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசியதுடன் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 28 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 64 ரன்களை குவித்திருந்த தீபக் ஹூடா, கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.