
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நேற்று நேப்பியர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூஸிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணி சார்பாக தொடக்க வீரர் டேவன் கான்வே மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பிலிப்ஸ் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.
அதன்பிறகு 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 9 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் குவித்திருந்த வேளையில் போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மழை நிக்க்காதன் காரணமாக இந்த போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டி “டை” ஆனது.
இதன் காரணமாக இந்திய அணி இந்து தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த மூன்றாவது டி20 போட்டியில் பந்துவீச்சின் போது அசத்தலாக செயல்பட்ட இந்திய அணியின் வேகப்பந்து பேச்சாளர் முகமது சிராஜ் நான்கு ஓவர்கள் பந்துவீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதால் அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.