
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி வரவுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
அதன்படி வரும் ஜூன் மாதம் 7 முதல் 11ஆம் தேதி வரையில் இங்கிலாந்து உள்ள ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா விளையாடுகிறது. ஐபிஎல் 2023 சீசனின் இறுதிப் போட்டி மே 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இரண்டுக்கும் இடையிலான இடைவெளி வெறும் 9 நாட்கள் மட்டுமே. அந்த இடைப்பட்ட நேரத்தில் இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ற வகையில் இந்திய வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு இந்திய அணி முன்னேறியது சிறப்பானதாகும். ஆனால், அது மிகவும் சவாலானது. இந்திய கிரிக்கெட் அணி அதிக அளவில் கிரிக்கெட் விளையாடி வருகிறது. அதே நேரத்தில் இரண்டாவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளதற்கு காரணம் அணியின் சிறப்பான செயல்பாடுதான்.