
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த், நேற்று டெல்லியில் இருந்து டேராடூன் அருகேயுள்ள தனது சொந்த ஊருக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சாலை விபத்திற்கு உள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கே ஆரம்பகட்ட சிகிச்சைகள் செய்து முடித்த பிறகு, டேராடூனில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு முழுமையாக ஸ்கேன் செய்து பார்த்ததில் பல இடங்களில் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பிசிசிஐ., ரிஷப் பந்திற்கு ஏற்பட்டிருக்கும் காயத்தை பட்டியலிட்டுள்ளது. அதில், நெற்றியில் இரண்டு வெட்டு காயங்களும் முட்டியில் கடுமையான காயங்களும் மற்றும் மணிக்கட்டு, பாதத்தில் சிராய்ப்புகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.